வயதான தம்பதியை தாக்கி 6½ பவுன் நகைகள் கொள்ளை

தஞ்சையில் வீட்டிற்குள் நுழைந்து வயதான தம்பதியை தாக்கி 6½ பவுன் நகைகளை ெகாள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-04-27 20:06 GMT
தஞ்சாவூர்;
 தஞ்சையில் வீட்டிற்குள் நுழைந்து வயதான தம்பதியை தாக்கி 6½ பவுன் நகைகளை ெகாள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வயதான தம்பதி
தஞ்சை கொல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்.இவருடைய மனைவி ராஜலட்சுமி(வயது63). இவருடைய மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தனது மருமகளுடன் வசித்து வந்தனர்.  இந்தநிலையில் அவர்களின் மருமகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்று விட்டார். 
தாக்குதல்
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இவர்களுடைய வீட்டுக்கு அடையாளம் தெரியாத 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.  
அப்போது அவர்கள் ராஜலட்சுமி மற்றும் நாகராஜனிடம் குறிப்பிட்ட ஒரு நபரின் பெயரை கூறி விசாரித்துள்ளனர். அப்போது அதற்கு பதில் அளிப்பற்குள் அந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தம்பதியினரை கை மற்றும் கம்பால் தாக்கியுள்ளனர். 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும் அவர்கள் தம்பதியிடம் இருந்து தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்தனர்.  பின்னர் வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த தாலி சங்கிலி, நெக்லஸ் உள்ளிட்ட நகைகளை திருடினர்.  அப்போது அறையில் தூங்கி கொண்டிருந்த குழந்தையின் இடுப்பில் இருந்த தங்க தாயத்து உள்பட 6½ பவுன் நகைகளை திருடிவிட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர். 
இதுகுறித்து ராஜலட்சுமி தஞ்சை தாலுகா போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்