அருப்புக்கோட்டையில் நகரசபை தலைவர் ஆய்வு

அருப்புக்கோட்ைடயில் நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2022-04-27 19:53 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை நகராட்சி 5-வது வார்டில்  நகரசபை தலைவர் சுந்தரலட்சுமி, துணைத்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் ெரயில்வே பீடர் ரோடு, கலைஞர் நகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சேறும், சகதியும் நிறைந்து காணப்பட்ட சாலைகளை பார்வையிட்டனர். அப்போது நகரசபை தலைவர்,  உடனடியாக சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது நகர்மன்ற உறுப்பினர் டுவிங்கிலின் ஞானபிரபா,வார்டு செயலாளர் டேனியல் பிரபாகரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்