முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

Update: 2022-04-27 19:51 GMT
சோமரசம்பேட்டை, ஏப்.28-
சோமரசம்பேட்டையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது, இதையடுத்து அன்று இரவு காமதேனு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து அன்ன வாகனம், காளை வாகனம், நாக வாகனம், சிம்ம வாகனம், தாமரை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் வீதியுலா நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை பக்தர்கள் உய்யகொண்டான் நதிக்கரையில் இருந்து பால்குடம், தீச்சட்டி மற்றும் அழகு போட்டு வந்து அம்மனை வழிபட்டனர். மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய முத்து மாரியம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். கடைசி நாள் நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 2-ந் தேதி கிளி வாகனத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பொன் மாரிமுத்து, தக்கர் புனிதா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்