அாியவகை ஆந்தை

அாியவகை ஆந்தை பிடிபட்டது.

Update: 2022-04-27 19:44 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள வானொலி திடலில் உள்ள சுவற்றின் மேல் நேற்று அரியவகை ஆந்தை ஒன்று உட்கார்ந்து கொண்டிருந்தது. மனித குழந்தையை போல் உருவம் இருந்த இந்த அரியவகை ஆந்தையை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

பின்னர் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விருத்தாசலம் வனத்துறையினர் இங்கு வந்து அதை பிடித்தனர். மேலும் இந்த ஆந்தை எங்கிருந்து வந்தது?, வெளிநாட்டு வகை ஆந்தையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்