போலி பெண் டாக்டர் கைது

கூடங்குளத்தில் போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-27 19:31 GMT
கூடங்குளம்:

கூடங்குளம் அணுமின் நிலைய மெயின் வாசல் எதிரே மருந்துக்கடை நடத்தி வருபவர் வசந்தகுமாரி (வயது 42). இவரது கடைக்கு வடமாநிலத்தை சேர்ந்த பிளாட்டை தாஸ் என்பவர் சிறிது உடல்நிலை குறைவின் காரணமாக டாக்டர் ஆலோசனை இல்லாமல் மருந்து வாங்க வந்துள்ளார்.

அப்போது அவருக்கு வசந்தகுமாரி மாத்திரையும் கொடுத்து, ஊசியும் போட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்