வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தென்காசி அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-04-27 19:28 GMT
தென்காசி:

தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரையை சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜ்குமார் (வயது 28). இவர் ஆய்க்குடி மற்றும் சாம்பவர்வடகரை பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜூக்கு பரிந்துரை செய்தார். அதன்படி ராஜ்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
 
இதனை தொடர்ந்து ராஜ்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, ஆய்க்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்