3 வீடுகளில் பணம் திருட்டு; போலீசார் விசாரணை

3 வீடுகளில் பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-04-27 19:14 GMT
பெரம்பலூர், 
பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தில் நேற்று இரவு 3 வீடுகளில் திருட்டு நடந்துள்ளதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், விளாமுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கரன் (வயது 39) என்பவருடைய வீட்டில் ரூ.7 ஆயிரமும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாங்கம் (40) என்பவருடைய வீட்டில் ரூ.5 ஆயிரமும் திருட்டு போனது. இதேபோல் ரங்கதுரை (34) என்பவரது வீட்டில் ரூ.3 ஆயிரம் திருட்டு போனது. சக்தி (39) என்பவருடைய வீட்டில் மர்ம ஆசாமிகள் திருட முயன்றனர். ஆனால் எந்த பொருளும் திருட்டு போகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்