மாங்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

மாங்கோட்டையில் முத்துமாரியம்மன கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-04-27 18:58 GMT
ஆலங்குடி:
முத்துமாரியம்மன் கோவில் 
ஆலங்குடி அருகே மாங்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றன. 
தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், காவடி, கரும்பில் தொட்டில் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து தோளாண்டி என்னும் நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா நடந்தது. இதில் சிறுவர்கள் கருப்பு, வெள்ளை மையை உடலில் பூசிக்கொண்டு வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான  பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்