தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்-அரியலூரில் இன்று நடக்கிறது
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அரியலூரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மையத்தில் நடத்தவுள்ளது. முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெறும் மனுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுகள் ஏதும் ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே, 18 வயது முதல் 35 வயது வரையிலான 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். எனவே முகாமில் மேற்கண்ட தகுதிகளையுடைய வேலை நாடுனர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து பங்கேற்று பயனடையலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.