முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

மேலூர் முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

Update: 2022-04-27 18:45 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே மேலூர் முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லா பஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். முகாமில் சென்னை நோக்குயோ நெட்வொர்க் சொலிஷன் பிரைவேட் லிமிடேட் கம்பெனியின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுரேந்திரன், சேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் வேலைக்கான நேர்காணல் நடத்தினர். இதில் முருகா பாலிடெக்னிக் மற்றும் சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். முகாமில் வேலைக்காக மொத்தம்  95 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் வருகிற ஜூன் 2- வது வாரத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து கல்லூரி தாளாளர் ரஹமத்துல்லா கூறுகையில், இந்த கல்வியாண்டிற்குள் இன்னும் சில நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தயாராக உள்ளது என தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை மின்னியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் ராதாகிருஷ்ணன், ஏழுமலை, தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். துணை முதல்வர் பாஸ்கர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்