குலசேகரம் அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை
குலசேகரம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம்,
குலசேகரம் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
குலசேகரம் அருகே நாகக் கோடு அம்பலத்து விளையை சேர்ந்தவர் டேவிட் (வயது 34), கட்டிடத்தொழிலாளி. திருமணம் ஆகாத டேவிட்டுக்கு குடிப் பழக்கம் இருந்ததாகவும், அதில் இருந்து விடுபட கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் டேவிட்டின் அறைக்கு டீ கொடுக்க அவருடைய தாயார் சென்றார். அப்போது அங்கு டேவிட் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதை பார்த்ததும் அவர் கதறி அழுதார்.
இதுபற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து டேவிட் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.