அண்ணன் மீது தாக்குதல்

சொத்து பிரச்சினையில் அண்ணன் மீது தாக்குதல்

Update: 2022-04-27 17:41 GMT
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி போலீஸ் சரகம் தேவர்கண்டநல்லூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 75). இவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்தி (70). இருவரும் தேவர்கண்டநல்லூரில் தனி தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அண்ணன், தம்பி இடையே சொத்து பிரச்சினை உள்ளது. சம்பவத்தன்று இந்த பிரச்சினை குறித்து சண்முகம் வீட்டுவாசலில் இருதரப்பினரும் பேசி கொண்டு இருந்தனர். 
இதில் தீர்வு ஏற்படாததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சண்முகத்தை தாக்கினர். இதில் காயமடைந்த அவரை திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து சண்முகம் கொடுத்த புகாரின் பேரில், அவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தியின் மனைவி சாவித்திரி மற்றும் உறவினர் தமிழ்கொடி ஆகிய மூன்று பேர் மீதும் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்