ஆசிட் வீசிய வழக்கில் 40 நாட்கள் கழித்து கள்ளக்காதலி சாவு

ஆசிட் வீசிய வழக்கில் 40 நாட்கள் கழித்து கள்ளக்காதலி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2022-04-27 17:26 GMT
தேவகோட்டை, 
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 35). கணவர் சுடலையாண்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாயுடன் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை சேர்ந்த செல்வம்(42) என்பவருடன் முத்துலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தேவகோட்டையில் தங்கி இருவரும் சேலை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இருவருக்கும் கடந்த மார்ச் 18-ந் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த செல்வம், ஆசிட்டை முத்துலட்சுமியின் முகத்தின் மீது ஊற்றி விட்டு தலைமறைவானார். முத்துலட்சுமி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலெட்சுமி  சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைதொடர்ந்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்