வணிக வரி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வணிக வரி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-27 17:10 GMT
பொள்ளாச்சி

1000 துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு உள்பட கடந்த ஆண்டு சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். குலுக்கல் முறையில் பொது மாறுதல் என்ற முறையை தவிர்த்து முழுமையான கலந்தாய்வு முறையில் பொது மாறுதலை நடத்த வேண்டும்.

 உரிய காரணமின்றி கோட்ட அளவிலான இடமாறுதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் பொள்ளாச்சி வணிக வரி மாவட்ட அலுவலக வளாகத்தில் நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு வணிக வரி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமிகுணம் தலைமை தாங்கினார். வணிக வரி பணியாளர் சங்கத்தின் பொறுப்பாளர் போத்திராஜ் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்