கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல்
நாகையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்தது.
வெளிப்பாளையம்:-
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்துக்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடத்துக்கு 4 ஆயிரத்து 997 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 2 ஆயிரத்து 758 பேருக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று, தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் பணிநியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 205 பணியிடங்களுக்கான நேர்காணல் நாகை மாவட்ட கால்நடை பராமரிப்பு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சுப்பையன் தலைமையில், உதவி இயக்குனர்கள் அசன்இப்ராகிம், முத்துக்குமரன், செல்லதுரை, விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில், ஆய்வாளர் பார்வேந்தன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இளநிலை அலுவலர் பிரகாசம் உள்பட கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்தினர்.