கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-27 16:59 GMT
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் செங்கதிர்செல்வன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ராகவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் செந்தில்குமார், மாநில அமைப்பு செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர். இதில் திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களின் பணி காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் துரை, ஜெயக்குமார், கணேசன், ராமசாமி, மாதேஷ், சக்திவேல், வெங்கடேசன், ஈஸ்வரி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்