கேரளாவுக்கு கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-04-27 16:59 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு போடிபாளையம், ஜமீன்ஊத்துக்குளி பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த தகவலை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ஒரகளியூர் பிரிவு அருகே நின்ற காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் திறந்து சோதனை செய்த போது ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த நவாஸ் என்பவர் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

 இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். இதற்கிடையில் காருடன் 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்