கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

கிணத்துக்கடவில் கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.

Update: 2022-04-27 16:59 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரேகவுண்டர். இவரது தோட்டத்தை குத்தகைக்கு மயில்சாமி என்பவர் எடுத்துள்ளார். இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று தோட்டத்தில் கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. 

திடீரென அந்த மாடு கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனைக்கண்ட மயில்சாமி கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை கயிறு கட்டி, ஒரு  மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர். 

அதன்பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பசுமாட்டுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்