விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் 15 பேர் மீது வழக்கு

விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-04-27 16:58 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 25-ந் தேதி எருது விடும் விழா நடத்தப்பட்டது. இதில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாகவும், விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், கிருஷ்ணகிரி பழையபேட்டை கிராம நிர்வாக அலுவலர் சரவணன் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் 15 பேர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்