பி.யு.சி. சமஸ்கிருத தேர்வு: 18 பேர் பாதுகாப்புடன் தேர்வு எழுதிய மாணவி
சிக்கமகளூருவில் பி.யு.சி சமஸ்கிருத தேர்வு 18 மாணவி பாதுகாப்புடன் எழுதினர்.
சிக்கமகளூரு:
மாநிலம் முழுவதும் பி.யு.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் சுருதி பட். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பி.யு. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பி.யு.சி. 2-ம் ஆண்டு பிறமொழி தேர்வுக்கு சமஸ்கிருதத்தை பதிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஹொன்னூரில் உள்ள அரசு வித்யாலயா கல்லூரி மையத்தில் சமஸ்கிருத தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சுருதி என்கிற மாணவி மட்டும் சமஸ்கிருத தேர்வு எழுதுவதற்கு வந்தார். அதற்காக அவரது உடல் வெப்பத்தை பரிசோதிக்க 2 செவிலியர்களும், கல்லூரி வளாகத்திற்குள் பாதுகாப்பு பணிகளுக்காக 2 போலீசாரும், தேர்வு அறை கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு 4 ஆசிரியர்கள், தனிப்படை அதிகாரிகள் என மொத்தம் 18 பேர் ஈடுபட்டனர்.
ஒரு மாணவி மட்டும் தேர்வு எழுதுவதற்கு 18 பேர் பாதுகாப்பு வழங்கினர். இந்த நிலையில் அந்த மாணவி சமஸ்கிருத தேர்வு எழுதிவிட்டு கூறியதாவது:- நான் பி.யு. முதலாம் ஆண்டு முதலே சமஸ்கிருதத்தை தேர்வு செய்து தேர்வு எழுதி வருகிறேன். அது எனக்கு சுலபமாக உள்ளது. அதில் நல்ல மதிப்பெண்ணும் பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.