ராமானுஜர் அவதார திருவிழா
ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் அவதார திருவிழா நேற்று தொடங்கியது.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவர் ராமானுஜர். இவரது அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ராமானுஜர் சன்னதி உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் ராமானுஜர் அவதரித்த திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜரின் அவதார திருவிழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ராமானுஜரின் அவதார திருவிழா நேற்று தொடங்கியது.
இந்த விழாவில் ராமானுஜர் தங்கப்பல்லக்கில் தேரடி, காந்தி ரோடு, திருவள்ளூர் சாலை, செட்டி தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு, தோட்டக்காரர் தெரு, சன்னதி தெரு, வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று தங்கப்பல்லக்கில் வலம்வந்த ராமானுஜரை பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கினர்.