வழக்குகள் கிடைக்காத விரக்தியில் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை
ஆண்டிப்பட்டியில் வழக்குகள் கிடைக்காத விரக்தியில் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 43). வக்கீலான இவருக்கு, கடந்த 3 மாதங்களாக சரிவர வழக்குகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை ஜெயக்குமார் தனது வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெயக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.