தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் மீட்பு

தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் உயிருடன் மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.

Update: 2022-04-27 12:36 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகருக்கு,  சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் ஒன்று தண்ணீர் தேடி வழி தவறி வந்துவிட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கும், ராணிப்பேட்டை வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வழி தவறி வந்த மானை பிடித்து, பாதுகாப்புடன் அம்மூர் காப்பு காட்டுக்குள் விட்டனர்.

மேலும் செய்திகள்