கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஓட்டப்பிடாரம் அருகே கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-27 11:50 GMT
தூத்துக்குடி:
கடந்த 20.3.2022 அன்று ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் (20) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் குலசேகரநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த எட்டப்பன் மகன் முத்துமாரியப்பன் (22) உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்துமாரியப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முத்துமாரியப்பனை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

மேலும் செய்திகள்