பெண் போலீசிடம் தகராறு செய்த வாலிபர் கைது
பெண் போலீசிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாைவயொட்டி அரும்பாவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பெண் போலீஸ் பூங்கொடி ஈடுபட்டார். அவரிடம் அதே ஊரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25) என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து பெண் போலீஸ் பூங்கொடி அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.