வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-26 20:37 GMT
பாபநாசம், ஏப். 27-
பாபநாசம் தாலுகா திருக்கோவில்பத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது27). இவரது மனைவி மல்லிகா (வயது 24). இந்தநிலையில் மல்லிகாவுக்கு அவரது கணவர் 16 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்துகொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மல்லிகா புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்