திரவுபதை அம்மன் கோவில் தீ மிதி திருவிழா

அதிராம்பட்டினத்தில் திரவுபதை அம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடந்தது.

Update: 2022-04-26 20:00 GMT
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் உள்ள திரவுபதைஅம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி மன்னப்பன் குளத்தில் இருந்து பக்தர்கள்  கிழக்கு கடற்கரை சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக ஒருவர் பின் ஒருவறாக வரிசையாக நடந்து வந்தனா். பின்னர் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த தீமிதி உற்சவம்  பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நடைபெறும் பெரிய விழா என்பதால் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்