குரங்குகள் பிடிப்பு
பொதுமக்களுக்கு இடையூறு செய்த குரங்குகள் கூண்டு பிடிக்கப்பட்டன.
பாபநாசம்;
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் ஊராட்சியில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குடிசைப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குரங்குகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் சாலியமங்கலம் வனக்காப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இரும்பு கூண்டு வைத்து அதில் குரங்குகளுக்கு பிடித்த பழங்களை வைத்தனர். இதில் இரும்புக்கூண்டில் 15 குரங்குகள் சிக்கின. பின்னர் பிடிபட்ட அனைத்து குரங்குகளும் வனப்பகுதியில் விடப்பட்டன.