இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; 23 பேர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-26 19:53 GMT
விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27) இந்து அமைப்பை சேர்ந்த இவரை கடந்த மாதம் 16-ந் தேதி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு நீதிக்கேட்டு இந்து முன்னணியினர் மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா தலைமையில், துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், செயலாளர் குற்றாலநாதன், கோட்ட தலைவர் தங்க மனோகரன், கோட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் விக்கிரமசிங்கபுரத்தில் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 23 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்