கரூர்,
கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் கரூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுங்ககேட்டு அருகே தனது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 3 மர்ம ஆசாமிகள் சரவணனை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் பர்சை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். அந்த பர்சில் பான் கார்டு, ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவை இருந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தாந்தோணிமலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.