250 கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல்
அருப்புக்கோட்டையில் 250 கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகர் பகுதியில் நகராட்சி, சுகாதார துறை அதிகாரிகள் பிளாஸ்டிக்ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் பஜார் பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் குழுவாக சென்று ஒவ்வொரு கடையாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்ட சுமார் 250 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடை உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.4,500 அபராதம் வசூலித்தனர்.
மேலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.