ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-04-26 18:51 GMT
ராசிபுரம்:
ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1986-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, முன்னாள் மாணவர் சிவா என்பவருக்கு சொந்தமான அரசபாளையம் விவசாய தோட்டத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் 80 பேரும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் தரணி வரவேற்றார். அப்போது முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் பாராட்டு தெரிவித்து கவுரவப்படுத்தினர். இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஆசிரியர்கள் ராமசாமி, சாமிநாதன், சரஸ்வதி, பிரபாகரன், குமாரசாமி, செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கலந்து கொண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை சத்யா தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்