பரமத்திவேலூர் அருகே கதை பாடும் நிகழ்ச்சி
பரமத்திவேலூர் அருகே கதை பாடும் நிகழ்ச்சி நடந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் ஊராட்சி கட்டமராபாளையம் விநாயகர் கோவில் திடலில் பொன்னர்-சங்கர் கதை பாடும் நிகழ்ச்சி கடந்த 8-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பொன்னர்-முத்தாயி, சங்கர்-பவளாயி திருமணம் நடைபெற்றது. இதில் உள்ளூரை சேர்ந்த சிறுவர்களுக்கு பொன்னர்-முத்தாயி, சங்கர்-பவளாயி வேடம் போட்டு திருமணம் நடைபெற்றது. வருகிற 30-ந் தேதி இரவு பொன்னர்-சங்கர் கதையின் முக்கிய நிகழ்வான படுகளம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர்.