விருதுநகர் பாலியல் வழக்கில் கைதானவரின் ஜாமீ்ன் மனு தள்ளுபடி
விருதுநகர் பாலியல் வழக்கில் கைதானவரின் ஜாமீ்ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜூனத் அகமது, ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இ்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது நீதிபதி கோபிநாத், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.