பென்னாகரம் அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பென்னாகரம் அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-04-26 18:00 GMT
தர்மபுரி:
பென்னாகரம் அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமி பலாத்காரம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நலப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 23). இவர் கடந்த 2018-ம் ஆண்டு தர்மபுரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு பெற்றோருடன் வந்த 4 வயது சிறுமியை மறைவிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து செல்வத்தை கைது செய்தனர். 
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார். விசாரணையின் முடிவில் செல்வம் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து செல்வத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிபதி சையத்பர்க்கத்துல்லா நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்