நல்லம்பள்ளி அருகே அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

நல்லம்பள்ளி அருகே அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-04-26 18:00 GMT
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உழவன்கொட்டாயில் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 15-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை நடைபெற்றது. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் அய்யனாரப்பன் மற்றும் பரிகார தெய்வங்கள் மற்றும் நுழைவு வாயில் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்