போச்சம்பள்ளி அருகே பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் சாவு

போச்சம்பள்ளி அருகே பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2022-04-26 17:59 GMT
மத்தூர்:
போச்சம்பள்ளி தாலுகா குள்ளம்பட்டி அருகே உள்ள மூக்கம்பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 24). சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் கண்ணண்டஅள்ளி பக்கமாக சென்று கொணடிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பொக்லைன் எந்திரம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அசோக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்