தண்ணீர் தேடிவந்த மான், நாய்கள் கடித்து சாவு
ராணிப்பேட்டை அருகே தண்ணீர் தேடி வந்த மான், நாய்கள் கடித்து உயிரிழந்தன.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் பகுதிக்கு சுமார் ஒரு வயது கொண்ட ஆண் மான் குட்டி ஒன்று, நேற்று வந்துள்ளது. அதனை தெருநாய்கள் கடித்து குதறியதில், மான் பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், ராணிப்பேட்டை வனத்துறை அலுவலர் கந்தசாமி உத்தரவின் பேரில், இறந்த மானை அம்மூர் கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செயது, அம்மூர் காப்புக் காட்டில் எரித்தனர்.