சின்னசேலம் அருகே மஞ்சள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்தது விவசாயிகள் 6 பேர் படுகாயம்
சின்னசேலம் அருகே மஞ்சள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்தது விவசாயிகள் 6 பேர் படுகாயம்
சின்னசேலம்
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(வயது 65) விவசாயியான இவரும் காரனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பழனிசாமி(30), செந்தில்குமார், பெரியசாமி, மகுடன், அர்ஜுனன் ஆகியோர் தங்களது நிலத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்து பின்னர் அவற்றை மூட்டையாக கட்டி விற்பனைக்காக மினி லாரியில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆத்தூர் சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர். வானக் கொட்டாய் பிரிவு சாலை அருகே வந்தபோது மினி லாரியின் வலதுபுற பின்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த கணேசன் உள்பட 6 விவசாயிகளும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.