சங்கராபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 112 பேருக்கு பணிநியமன ஆணை
சங்கராபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 112 பேருக்கு பணிநியமன ஆணை
சங்கராபுரம்
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், அட்மா குழு தலைவர் ஆறுமுகம், ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் ராஜா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் சுகந்தி வரவேற்றார்.
இந்த முகாமில் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்துள்ள ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். 23-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்துகொண்டு 570 பேரிடம் நேர்காணல் நடத்தினார்கள். இதில் 112 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த முகாமில் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் வாசுகி, பாக்கியலட்சுமி, செல்வி, கலா, தனலட்சுமி, சங்கீதா, பூபதி, உதவியாளர் மருதுபாண்டி மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.