டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது

Update: 2022-04-26 16:25 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மகாதானத்தெருவில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பா.ஜ.க. சார்பில்  முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, உதவி கலெக்டர் பாலாஜி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேசன், நகர தலைவர் மோடி கண்ணன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மகாதானத் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதாலும், டாஸ்மாக் மேலாண் இயக்குனரின் கருத்தினை பெற வேண்டியுள்ளதாலும், இந்த கடையினை 3 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்