சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

நாகையை அடுத்த சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா, காணிக்கையாக வேல் வழங்கினார்.

Update: 2022-04-26 16:21 GMT
சிக்கல், ஏப்.27-
நாகையை அடுத்த சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா, காணிக்கையாக வேல் வழங்கினார்.
சசிகலா சாமி தரிசனம்
நாகையை அடுத்த சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சசிகலா நேற்று காலை 11.35 மணிக்கு வந்தார். 
அங்கு வந்த அவர் கோவிலில் சுந்தர கணபதி சன்னதி, சிங்காரவேலர் சன்னதி, வேல் நெடுங்கண்ணி அம்மன் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். 
காணிக்கையாக வேல் வழங்கினார்
இதனைத்தொடர்ந்து அவர் தான் கொண்டு வந்த செம்பினால் செய்யப்பட்ட வேலை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். 
இதையடுத்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள சிங்கார சண்முகநாதர் சன்னதியில் நடந்த சிறப்பு வழிபாட்டில் அவர் கலந்து கொண்டார். வழிபாட்டை முடித்துக்கொண்ட சசிகலா கோவிலில் இருந்து நண்பகல் 12.50 மணிக்கு காரில் புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது உதவியாளர்கள், பாதுகாவலர்கள் மட்டும் கோவிலுக்கு வந்து இருந்தனர்.

மேலும் செய்திகள்