மதுரை வீரன் கோவில் குடமுழுக்கு
ஆயக்காரன்புலம் மதுரை வீரன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்றாம்சேத்தி எல்லப்ப ரெட்டியார்குத்தகை கிராமத்தில் அமைந்துள்ள மதுரை வீரன் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 24-ந் தேதி யாகசாலை பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து விநாயகர், முருகன் சன்னதிகளுக்கும் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.