பழுதடைந்த அடிபம்புக்கு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் போராட்டம்

சாத்தான்குளத்தில் பழுதடைந்த அடிபம்புக்கு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-04-26 16:13 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சண்முகபுரத்தில் அடிபம்பு ஒன்று உள்ளது. அதன்மூலம் அப்பகுதி மக்கள் பயன் அடைந்து வந்தனர். தற்போது அந்த அடிபம்பு பழுதடைந்து காணப்படுகிறது. அதை சரிசெய்து தரக்கோரி, மாவட்ட பா.ஜனதா வர்த்தக பிரிவு செயலாளர் பரமசிவன் தலைமையில் அப்பகுதி மக்கள், பழுதடைந்த அடிபம்புக்கு மலர் அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தினர். 

மேலும் செய்திகள்