பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
மயிலாடுதுறை அருகே உள்ள காளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே உள்ள காளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காளி ஊராட்சி மன்ற தலைவி தேவி உமாபதி தலைமை தாங்கினார். இதில் ஆசிரியர் பயிற்றுனர் சாரங்கபாணி கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு பற்றி விளக்கி கூறினார். தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்போடு பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, பள்ளி மேலாண்மை குழு புதிய தலைவராக கலையரசி, துணைத்தலைவராக சிவப்பிரியா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராமன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.