80 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு

போடி அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.

Update: 2022-04-26 15:43 GMT
போடி:
போடி அருகே உள்ள வினோபாஜி காலனி முதல் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவர் கொட்டகை அமைத்து பசு மாடுகள் வளர்த்து வருகிறார். அவரது ஒரு பசுமாடு நேற்று காலை அப்பகுதியில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது‌. 
அந்த கிணற்றில் 40 அடிவரை தண்ணீர் இருந்தது. இதனால் தண்ணீரில் தத்தளித்தபடி பசு கத்தியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், கிணற்றில் விழுந்த பசுவை கயிறு கட்டி மீட்டனர். 

மேலும் செய்திகள்