மண் மாதிரி சேகரிப்பு முகாம்
திருமருகல் அருகே மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் வட்டாரம் கோபுராஜபுரம் கிராமத்தில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ் தலைமை தாங்கினார்.மண் சேகரிப்பு முகாமை ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ் தொடங்கி வைத்து பேசினார். இதில் திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் மண்மாதிரி சேகரிக்கும் முறைப்பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் பயிர்களுக்கு ஏற்படும் நன்மைகளை குறித்து பேசினார். இதல் நாகை மாவட்ட மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஜெயபிரகாஷ் மண்மாதிரி சேகரிப்பு செயல் விளக்கம் செய்து காண்பித்து மண்மாதிரி ஆய்வுக்கு அனுப்பும் முறைப்பற்றியும் எடுத்துக்கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முகமது சாக்கீர் செய்திருந்தார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.