அனில் தேஷ்முக் மீதான ரூ.100 கோடி மாமூல் புகார்- சண்டிவால் ஆணைய விசாரணை அறிக்கை உத்தவ் தாக்கரேயிடம் சமர்பிப்பு

முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது பரம்பீர் சிங் கூறிய ரூ.100 கோடி மாமூல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய சண்டிவால் ஆணையம் அதன் அறிக்கையை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் சமர்பித்தது.

Update: 2022-04-26 14:57 GMT
படம்
மும்பை, 
முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது பரம்பீர் சிங் கூறிய ரூ.100 கோடி மாமூல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய சண்டிவால் ஆணையம் அதன் அறிக்கையை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் சமர்பித்தது.
சண்டிவால் கமிஷன்
மும்பையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் அண்டிலா பங்களா அருகில் பயங்கர வெடிப்பொருட்களுடன் கார் மீட்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே கைது செய்யப்பட்டார். இதையடுத்து அப்போது மும்பை கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
இதையடுத்து அவர் மராட்டிய உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீது மாதம் ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறியிருந்தார். அனில்தேஷ்முக், போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயை மும்பையில் உள்ள ஓட்டல், பார்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க கூறியதாக பரம்பீர்சிங் கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக  சி.பி.ஐ. அனில்தேஷ்முக் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தது. அனில்தேஷ்முக் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை சமர்பிப்பு
இதேபோல பரம்பீர் சிங் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சண்டிவால் ஆணையத்தை அமைத்து இருந்தது. இந்த ஆணையம் கடந்த ஒரு ஆண்டாக அனில்தேஷ்முக் மீது பரம்பீர் சிங் சாட்டிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தியது. இதில் அனில்தேஷ்முக், சச்சின் வாசே, பரம்பீர் சிங் மற்றும் சம்மந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
இந்தநிலையில் விசாரணையை முடித்து சண்டிவால் ஆணையம் அதன் அறிக்கையை இன்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் சமர்பித்தது. 


மேலும் செய்திகள்