பார் ஊழியரிடம் கத்தியை காட்டிபணம் பறிக்க முயற்சி
பார் ஊழியரிடம் கத்தியை காட்டிபணம் பறிக்க முயற்சி
கோவை
ராமநாதபுரம் மாவட்டம் கோவிந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழ் (வயது 35). இவர் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை பாரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் சித்தாபுதூரில் உள்ள தனலட்சுமி நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (22), ரவிந்தரன் (26) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 தரும்படி அவரிடம் கேட்டுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள்2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 2பேரையும் கைது செய்தனர