கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-04-26 13:25 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி வண்ணார் தெருவை சேர்ந்த மாடசாமி மனைவி முனியலட்சுமி (வயது 35). இவரை கொலை செய்த வழக்கில் முத்தையாபுரம் ராஜீவ்நகரைச் சேர்ந்த ரவி மகன் கண்ணன், கோரம்பள்ளம் சோரீஸ்புரத்தைச் சேர்ந்த கட்டுராஜா மகன் கோடாங்கி என்ற கோடா என்ற முத்து (20) ஆகியோரை தென்பாகம் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். 

இதைத்தொடர்ந்து கண்ணன், கோடாங்கி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஏற்று, கண்ணன், கோடாங்கி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் பாளையங்கோட்டை சிறையில் வழங்கினார்.

மேலும் செய்திகள்